கால் நூற்றாண்டுக்கு மேலாக மலையக நாடகக்கலை, இலக்கிய முயற்சிகள், விளையாட்டு, கலை கலாசார பாரம்பரிய அம்சங்களை பேணி வளர்த்து வரும் மலையக நட்சத்திரக் கலைப் பேரவை தனது 28 ஆவது அகவையில் இவ்வருடம் (2024) கால் பதிக்கிறது.
இவ்வருடத்திற்கானதும் எதிர்காலத் திட்டமிடலுக்குமான பேரவையின் பொதுக் கூட்டம் புசல்லாவை இந்து தேசியக் கல்லூரியில் தலைவர் மலையக வாசுதேவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டு பதவிப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் தலைவராக கலைஞர் மாதையா வாசுதேவன் என அழைக்கப்படும் மலையக வாசுதேவன் தெரிவுசெய்யப்பட்டார்.
அமைப்பின் செயலாளராக அதிபரும் ஊடகவியலாளருமான மருதமுத்து நவநீதன் தெரிவானார், பொருளாளராக சமாதான நீதவானும் பாடகரும், ஊடகவியலாளருமான முப்புளி மகேஸ்வரனும், பிரதித் தலைவராக அதிபர்,நாடகக் கலைஞர் ஆறுமுகம் சந்திரமோகனும், உப தலைவராக அறிவிப்பாளரும் பாடகருமான மாரிமுத்து யோகேஸ்வரனும், தெரிவு செய்யப்பட்டனர்.

அமைப்பின் உப தலைவராக கவிஞர் சந்தனம் சத்தியநாதன் தெரிவானார். பிரசார செயலாளராக கம்பளை சேகர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மாதரணித் தலைவியாக சமூக சேவகியும் நாடகக் கலைஞருமான திருமதி வாமதேவன் சந்திராவும், செயலாளராக திருமதி நாடகக் கலைஞர் S.M.மகேஸ்வரியும், பிரச்சாரச் செயலாளராக சமூகசேவகி செல்வி இரா.சண்முகதீபாவும் தெரிவாகினர்.
பேரவையின் காப்பாளர்களாக தொழிலதிபர்கள் I.V.S. விஜயன் P.சேதுராமன், எழுத்தாளர்கள் மு.சிவலிங்கம் பெ.முத்துலிங்கம் , புசல்லாவை நகர வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த பெ.இராஜாராம் ஆகியோர் பேரவைக்கு வளம் சேர்ப்பதோடு அமைப்பின் ஆலோசகர்களாக உதவி கல்விப் பணிப்பாளர் துரைசாமி நடராஜா, ஆசிரியர் எஸ்.பீ.முரளி, சிரேஷ்ட பத்திரிகையாளர் கண்டி இரா.அ.இராமன், அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தலைவர் எம் அன்பழகன், கல்வியலாளர் நயபனை முனுசாமி முத்துகுமார் ஆகியோர் ஆலோசனை சேவைகளை பேரவைக்கு வழங்கி வைக்கின்றனர்.
பவன்










