நாய் இறைச்சி குறித்து தென்கொரியா எடுத்துள்ள முடிவு……!

தென்கொரியாவில் நாய் இறைச்சி உண்பதற்கு தடைவிதிக்கும் சட்டமூலம் அந்நாட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே பன்னெடுங்காலமாக நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க தென் கொரியா அரசு நீண்ட காலமாக ஆலோசனையில் ஈடுபட்டுவந்தது.

அத்துடன், நாய் இறைச்சி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் பிராணி நல ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து, சட்டம் கொண்டு வர தென்கொரிய அரசு முடிவு செய்தது. அதன்படி, தென்கொரிய நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டமூலம் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 208 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நாய் கறி உண்பதற்கு தடை விதிக்கும் சட்டமூலம், ஜனாதிபதிக்கு அனுப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் தென்கொரியாவில் நாய்கறி சாப்பிடுவதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்படும்.

Related Articles

Latest Articles