ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை (வெற்றிலை சின்னம்) மீள கட்டியெழுப்புவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கியுள்ளது.
சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவும், மத்திய குழுவும் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் கூடியது.
இதன்போது அடுத்த தேர்தலை கூட்டணி அமைத்து எதிர்கொள்வதற்கும், அதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.










