ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் ஆகியவற்றை நடத்துவம் காலப்பகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இதன்படி 2024 செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தலையும், 2025 ஜனவரியில் பொதுத்தேர்தலையும், 2025 மார்ச்சில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு, ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடியது. இதன்போது இது பற்றி தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு முடிவெடுத்துள்ளது.










