நானுஓயா டெஸ்போட் (சீனிக்கத்தாளை) பகுதியில் மரமொன்று வேரோடு சாய்ந்ததில் இரு வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
வீடுகளின் கூரைப்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், வீடுகளுக்குள் இருந்த பொருட்களும் உடைந்துள்ளன. நேற்றிரவே (09) அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடுகளுக்கு அருகாமையில் இருந்த மரமொன்று காற்றின் வேகத்தாலும் மழையின் தாக்கத்தாலும் முறிந்துவிழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட வீடுகளை இப்பகுதிக்கு பொறுப்பான கிரிமிட்டி 476/A கிராமசேவகர் பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் நுவரெலியா பிரதேச சபையில் கவனத்திற்கும், நுவரெலியா மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
அனர்த்தத்தின்போது மேற்படி வீடுகளில் எவரும் இருக்கவில்லை.
நானுஓயா

