‘யுக்திய’ தேடுதல் நடவடிக்கைமூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறு கிடைக்கபெறுமா என்பது சந்தேகமே என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” யுக்திய நடவடிக்கைமூலம் நெத்திலி மீன்களே பிடிபடுகின்றன. சூறாக்கள் இன்னும் சிக்கவில்ல. அதேபோல ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னர் குற்றம் இழைத்தவர்களும் கைது செய்யப்படுகின்றனர். எனவே, இந்த நடவடிக்கைமூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறு கிடைக்குமா என்பது சந்தேகமே.
முயற்சி எடுப்பது நல்லது. இந்நடவடிக்கை தொடர்பில் பெரிய விம்பத்தை பதில் பொலிஸ்மா அதிபர் தோற்றுவித்துள்ளார். அவர் இதற்கு முன்னரும் மேல்மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த மாகாணத்தில்தான் அதிக போதைப்பொருள் குற்றச் செயல்கள் இடம்பெற்றன. தற்போது அவருக்கு திடீரன எங்கிருந்து சக்தி வந்தது?” – என்றார்.
