பஸ் உரிமையாளர்மீது முகமூடி கும்பல் வாள்வெட்டு தாக்குதல்!

யாழ். பருத்தித்துறை பஸ் நிலையத்தில் வைத்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ் உரி மையாளரும் சாரதியுமான தேவகுமார்என்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசா லையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று அதிகாலை முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பருத்தித்துறையிலி ருந்து கட்டைக்காடு நோக்கிச் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளரான பஸ் சாரதிமீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆழியவளை – கொடுக்கிளாயைச் சேந்த தேவகுமார் என்ற குடும்பஸ்தர், உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசா லையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக் காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணை களை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles