” கப்பல் பயணத்துக்கு எனது சொந்த பணத்தையே செலவளித்தேன். 25 லட்சம் ரூபா செலவளித்து விருந்துபசாரம் நடத்தப்பட்டது எனக் கூறப்படும் கதையெல்லாம் போலியானவை.”
இவ்வாறு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் துறை அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நடுக்கடலில் விருந்துபசாரம் நடத்தப்பட்டுள்ளது எனவும், மது விருந்துகூட இருந்துள்ளது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவற்றை இராஜாங்க அமைச்சர் முற்றாக நிராகரித்துள்ளார்.
” 25 லட்சம் ரூபா எனவும், கோடி கணக்கல் செலவளிக்கப்பட்டது எனவும் தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறுகின்றார். இல்லை, சென்வீச், ரோல்ஸ் உள்ளிட்டவைக்கு 14 ஆயிரம் ரூபாவரையே செலவளிக்கப்பட்டது. அதுவும் எனது சொந்த பணம்.
இந்த கண்காணிப்பு பயணத்துக்கு மொத்தம் 3 லட்சம்தான் செலவானது. தேவையெனில் எரிபொருள் செலவையும் வழங்க தயார்” – என்றார்.