20 மீற்றர்தூரம்கூட பார்வை விளங்காது – இதில் இரவில் கண்காணிப்பு பயணமாம்…!

” 20 மீற்றர் தூரம்வரைகூட பார்வை விளங்காது, இதில் இரவில் கடலில் கண்காணிப்பு பயணமாம்…யாரை ஏமாற்ற இந்த கதை…” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க, ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கடல் பயணம் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

” கப்பலில் விருந்துபசாரம் நடத்தினரா என தெரியவில்லை…..,  கண்காணிப்பு பயணம் எனக் கூறப்படுகின்றது. ஒழுங்காக நடக்க முடியாது, 20 மீற்றர் தூரம்கூட பார்வை விளங்காது, இதில் இரவில் கண்காணிப்பு பயணமாம். எதற்காக இரவில் செல்கின்றனர் என்பது எமக்கு தெரியும்.” – என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles