உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சுவிட்சர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இம் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி உலக தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வருடம் உலக பொருளாதார மாநாட்டில் இலங்கை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் பின்னர் உகண்டாவில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவும் ஜனாதிபதி அந்நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்புவார்.
