மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேற காலக்கெடு – சீன சார்பு ஜனாதிபதியால் இராஜதந்திர மோதல்

”மாலத்தீவில் உள்ள இந்திய இராணுவத்தினர் அனைவரும் மார்ச் 15ஆம் திகதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்” என அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மாலைதீவில் சீன சார்பு ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவுக்கும், மாலைதீவுக்கும் இடையில் இராஜதந்திர மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாலைதீவின் புதிய ஜனாதிபதி முகம்மது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருந்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முய்சுவுக்கு முன், மாலைதீவு ஜனாதிபதி யாராக இருந்தாலும் பதவியேற்றதும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவதே வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த விஷயத்தில் முய்சு முரண்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதற்குக் காரணம், முகமது முய்சுவின் மாலைதீவு முற்போக்கு கட்சியில் சீனாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே இந்தியா இடையே உரசல் போக்கு தொடரும் நிலையில் சீனாவுடன் இணைப்பை பலப்படுத்த மாலத்தீவு அதிபர் பல்வேறு உத்திகளை முன்னெடுத்தார். அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு விதித்துள்ளார். அதன்படி இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15க்குள் அந்நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles