ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகி தற்போது அரசுக்கு ஆதரவளித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராகிவருகின்றார் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து இது தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டுவருகின்றன எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷிடம் எமது நிருபர் வினவியபோது, அவ்வாறான பேச்சுகள் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டு, குறித்த செய்தியை நிராகரித்துள்ளார்.










