” ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அல்ல யார் என்ன சொன்னாலும் யுக்திய ஒப்பரேஷன் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.” – என்று சூளுரைத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” யுக்திய ஒப்பரேஷனுக்கு எதிராக தேசிய ரீதியிலும், சர்வதேச மட்டத்திலும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இலங்கையில் உள்ள சிறு குழுவொன்று இதற்கு எதிராக சர்வதேசத்துக்கு எழுதுகின்றது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள்பேரவைக்கூட, எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பில் ஊடகங்கள் என்னிடம் வினவின, இதன்போது யார் என்ன சொன்னாலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்படாது, தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெளிவாக குறிப்பிட்டேன். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
அதேபோல எமது நாட்டில் உள்ள சில சட்டத்தரணிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றன. எமது பதில் பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபராக வருவதை தடுப்பதற்கு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். யுக்திய நடவடிக்கையை நிறுத்துவதே இதன் நோக்கமாகும்.” – என்றார்.










