அயோத்தியில் எதிர்வரும் 22 ஆம் திகதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக சங் பரிவார் அமைப்பினர், முக்கிய பிரமுகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கிவருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்கள் சுமார் 6,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தோனிக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.