மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நிதியொதுக்கீட்டில், நோட்டன் – அட்டன் பிரதான வீதியின் தெற்கு வனராஜா பகுதியில் நவீன பஸ்தரிப்பிடம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு இன்று கையளிக்கப்பட்டது.
அட்டன் தனியார் பஸ் உரிமையயாளர் சங்கத்தின் உபதலைவர் எம். உதயகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் பாராக்கிரம திசாநாயகவின் பரிந்துரைக்கமைய சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியொதுக்கீட்டில் மேற்படி பஸ்தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.
பஸ்தரிப்பிட திறப்பு விழா நிகழ்வில் அட்டன் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளரும் நோர்வூட் பிரதேசசபை முன்னாள் உறுப்பினருமான மு.ராம், நோர்வூட் சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் அணில் பிரசன்ன, வனராஜா பிரதேச சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
