இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி – 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கி சிம்பாப்பே அணி 14.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியின் சார்பில் அணித்தலைவரான வனிது ஹசரங்க, நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 10.5 ஓவர்கள் நிறைவில் விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இதன்படி ரி – 20 தொடரை 2-1 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றியது.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 33 ஓட்டங்களையும், பெத்தும் நிஷாங்க 39 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.