சீனாவின் தெற்மேற்கு மலைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் 47 பேர் சிக்குண்டு காணாமல்போயுள்ளனர். மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷய்குன் கிராமம் உள்ளது.
அந்த கிராமத்தலேயே இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவில் 10 இற்கு மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.
இவ்வனர்த்தம் குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500 இற்கு மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். மீட்பு பணியில் 200 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மீட்பு பணிகளை விரைவாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்பு விடுத்துள்ளார்.