‘மலையகத்தில் விகாரையொன்றுக்கு தமிழரின் பெயர் வைத்த தேரர்’

இலங்கையானது பல்லின மக்களும் வாழும் நாடாகும். அவர்களுக்கு தாம் விரும்பும் மதத்தை பின்பற்றி வாழ்வதற்கான உரிமையும் இருக்கின்றது.

எனினும், எங்கள் மதம் பெரியதா அல்லது உங்கள் மதம் பெரியதா என மதம் பிடித்து திரியும் சிலரும் வாழவே செய்கின்றனர். சில அடிப்படைவாத மதத்தலைவர்களாலும் நாட்டில் அவ்வப்போது பிரச்சினைகள் உருவாகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தமிழ் பெயரில் விகாரையொன்று உள்ளதை அறிவீர்களா?

கண்டி மாவட்டத்தில் கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ கிராம சேவகர் பிரிவிலேயே “சுப்பிரமணியராமய”  என்ற தமிழ் பெயரில் இந்த விகாரை காணப்படுகின்றது.

மலையக தோட்டத்துறை வரலாற்றில் தோட்டங்கள் ஒரு காலத்தில் தனியாருக்குச் சொந்தமானதாக காணப்பட்டது. அவ்வாறான நிலையில் இந்திய வம்சாளியை சேர்ந்த சுப்பிரமணியம் முதலாளி புப்புரஸ்ஸ தோட்டத்தை நிர்வகித்து வந்தார். அந்த அந்நேரத்தில் தமது தோட்டத்தில் ஒரு விகாரை அமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவரது மனதில் உருவானது.
அதற்கமைய தனது சொந்த காணியில் பௌத்த விகாரைக்கு என ஒருப் பகுதியை வழங்கி 1958 ஆம் ஆண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இவரது பெயர் எம்.எம்.சுப்பிரமணியம் என்பதனால்  “சுப்பிரமணியராமய” என விகாரைக்கு பொறுப்பாக இருந்த வணக்கத்திற்குரிய அமரர் ஸ்ரீ விமலானந்த தேரர் அவர்களினால் இந்த பெயர சூட்டப்பட்டது, தற்போதும் அந்த பெயரிலேயே காணப்படுகின்றது.
இதன் பயனாக இவரது தோட்டத்தில் பௌத்த விகாரை அமைந்ததோடு அந்த பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்பட்டதுடன் ஒரு புப்புரஸ்ஸ என்ற ஒரு சிறிய நகரமும் உருவானது. தற்போது இந்த பிரதேசத்தில் தமிழர்களும்¸ சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த “சுப்பிரமணியராமய”  இந்த பிரதேசத்தில் பௌத்த மத சார்பான விடயங்களையும் தாம் பாசல் என அழைக்கப்படும் அறநெறி பாடசாலையும் பௌத்த மக்களுக்கும்¸ இந்து மக்களுக்கும் தேவையான விடயங்களை செய்து வருகின்றது. இதற்கு காரணமாக இருந்த அமரத்துவம் அடைந்த ஸ்ரீ விமலானந்த தேரர் ஆவார்.
இவர் இந்த விகாரையை பல வருடங்களாக நிர்வகித்து வந்ததுடன் பிரதேச மக்களுக்கு ஆன்மீக ரீதியில் பல சேவைகளை செய்து வந்துள்ளார். இடைக்காலப்பகுயில் இந்த பெரை மாற்றுவதற்கு பலர் முயற்சித்தப் போதும் தேரர் அதனை செய்யவிடவில்லை. இவ்வாறு நம் முன்னோர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வந்துள்ளமை சமூகத்திலுள்ள ஏனையயோருக்கு ஒரு எடுத்து காட்டாகும்.
எனவே இது போன்ற செயற்பாடுகளை கவனத்தில் கொண்டு செயற்படுவோமானால் நாட்டில் சாந்தி¸ சமாதானம்¸ சமத்துவம் நிலவும் என்பதில் ஐயமில்லை. அதே வேலை தேரர் எந்த அளவுக்கு நன்றி உடையவராக இருந்துள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் இது அனைவரையும் சிந்திக்கவும் பெருமைப்படவும் வைக்கின்றது.
மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles