நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டம், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
அத்துடன், குறித்த சட்டம் ஊடாக மக்களின் உரிமை மீறப்படுகின்றது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில், அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே இச்சட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. இது மக்களின் அரசியல் உரிமையை மீறும் செயல். இது தற்காலிகமான சட்டமாகும். இந்த ஜனநாயக விரோத சட்டம், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மீளப்பெறப்படும்.” – எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.
