பதுளை ரிதிபான பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர் .
பதுளை , ரிதிபான பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து ஹாரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் முச்சக்கரவண்டி சாரதியாக கடமையாற்றுவதாகவும், போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்










