ஜனவரியில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கைக்கு ஜனவரி மாதத்தில் வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 201,687 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 16 மாதங்களில் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர் என்று தாமரை கோபுர நிர்வாகப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 50 ஆயிரமாவது சுற்றுலாப் பயணியாக வருகைதந்த பல்கேரிய பெண் ஒருவருக்கு நேற்று (31) சிறப்புப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும் பாலானோர் இந்தியர்கள், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles