லிற்றோ சமையல் எரிவாயுவின் விலையில் இம்மாதம் மாற்றம் வராது என்று லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
“ உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருந்தாலும், மக்கள் நலன் கருதி பெப்ரவரி மாதத்தில் விலை திருத்தத்தை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத விலை பட்டியலுக்கமையவே எரிபொருள் விநியோகிக்கப்படும்.” – எனவும் அவர் கூறினார்.










