பதுளை – மஹியங்கனை வீதியில் பயணித்த வேனொன்று நேற்றிரவு தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
படுகாயமடைந்த சிறுவன் பதுளை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
நேற்று இரவு 7.30 மணியளவில் பதுளையில் இருந்து மஹியங்கனை பக்கமாக அதி வேகமாக சென்று கொண்டிருந்த வேன், கைலகொட பகுதியில் வைத்து – சாரதி திடீரன பிரேக் பிடித்த போது வேன் அருகாமையில் இருந்த சுவரில் மோதி – சுமார் 15 மீட்டர் தூரம் இழுத்து சென்று அங்கு இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து இடபெற்ற போது சாரதி மற்றும் கைலகொட பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் வேனுக்குள் இருந்ததாகவும் விபத்தில் 15 வயதுடைய சிறுவன் பலத்த காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அவர் மதுபோதையில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சாரதி பண்டாரவளை நெலுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்
