மரக்கிளை முறிந்து விழுந்து 14 வயது மாணவன் பலி – நோர்வூட் பகுதியில் சோகம்!

மரக்கிளை முறிந்து, விழுந்ததில் 14 வயது மாணவர் ஒருவர் பலியாகியுள்ள பரிதாபகரமான சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட் நியூட்டன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் தரம் 9 இல் கல்வி பயிலும் முருகன் அஷால் (வயது – 14) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிகையலங்கார நிலையத்துக்கு சென்றுகொண்டிருக்கையிலேயே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அவர், டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து மாணவனின் சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 03 ஆம் திகதி (நேற்று முன்தினம்) மதியம் 12 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Related Articles

Latest Articles