சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெறுகின்றார் எனக் கூறப்படும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிங்கபூரில் இருந்து தனிப்பட்ட ரீதியில் வாங்கிய மருந்தே தனக்கு வேண்டும் என கோருகிறார் எனவும், அவரால் மக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மருத்தை நிராகரிக்கின்றார் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் பேரவையின் தலைவரும், விசேட வைத்திய நிபுணருமான ருக் ஷான் பெல்லன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தான் இறக்குமதி செய்த மருந்து வேண்டாம் என அதனை கெஹலிய ரம்புக்வெல்ல நிராகரித்துள்ளார் எனவும், சிங்கப்பூரில் இருந்து தனிப்பட்ட ரீதியில் தனக்கு வாங்கப்பட்ட மருந்தே வேண்டும் என அவர் கோருகின்றார் என தெரியவருகின்றது.
அதேபோல சிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்க முடியாது, தனியார் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கோருகிறார் எனவும் அறியக்கிடைத்துள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரிகள் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும்.
சிறை அறைக்குள் போட்ட பின்னர் அங்கு சுகயீனம் ஏற்பட்டால் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடைமுறையே உள்ளது. ஆனால் சிறை அறைக்குள் போடாமல் கெஹலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பிலும் நடவடிக்கை அவசியம்.” – என்றார்.