இரத்தினபுரி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 100 ஆக அதிகரித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனீ லொகு போதாகம நேற்று தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வரை 91 ஆக கா ணப்பட்ட கொரோனா நோயாளர்க ளின் எண்ணிக்கை நேற்று திடீரெ ன 9 ஆல் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 5 கொரோனா சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் 1668 குடும்பங்களைசேர்ந்த 5316 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் பிரன்டிக்ஸ், துறைமுக, மீன்குழு என 8 குழுக்களாக வகுக்கப்பட்டு வெவ்வேறாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.