ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(09) பிற்பகல் ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.