பாடசாலை கல்வி முறையில் AI தொழில்நுட்ப பாடநெறியை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
AI செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட பணிக் குழுவின் பரிந்துரைகளின்படி, கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகளை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது என்று கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோ சாப்ட் ஆதரவுடன் இந்த முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சர்வதேச பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்து, தேவையான அடிப்படை மனித வளங்கள் உள்ள பாடசாலைகளில் தரம் 8 முதல் முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் இதற்காக 100 ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கவுள்ளது.