இளம் மனைவியை கொலை செய்த கணவன் – வெலிமடையில் பயங்கரம்!

தனது மனைவியைக் கொலை செய்தார் என சந்தேகிக்கப்படும் கணவரை வெலிமடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வெலிமடை, டயரபா தோட்டம் மேல்பிரிவைச் சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles