அரசியல் பிரமுகருடன் திரிஷா ‘சட்டப்போர்’!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா குறித்து சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அவரது பேச்சுக்கு திரைத்துறையினரும் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், ஏவி ராஜு க்கு நடிகை திரிஷா வக்கீல் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு, அண்மையில் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா குறித்தும் மற்ற் நடிகைகள் குறித்தும் மோசமாக பேசி இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இயக்குநர் சேரன்,குஷ்பு, கஸ்தூரி என திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இதுகுறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய ஒன்றும் இல்லை அனைத்தையும் சட்டப்படி செய்வேன் என பதிவிட்டு இருந்தார்.

மேலும், பத்திரிக்கை, சமூக வலைத்தளங்களில், த்ரிஷா குறித்து அவர் பேசியுள்ள, வெளியிட்டுள்ள அவதூறான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அனைத்து பதிவுகளையும் உடனடியாக நீக்க அல்லது அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இந்த அறிவிப்பை பெற்ற 24 மணி நேரத்திற்குள் திரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன், மன்னிப்பு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் ஏ.வி.ராஜூவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா வலியுறுத்தியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles