A/L பரீட்சை பெறுபேறு – ஊவா மாகாணம் 2 ஆம் இடம்! 5 ஆவது இடத்தில் மத்திய .மாகாணம்

கபொத உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கல்வி அமைச்சு செய்த பகுப்பாய்வு அறிக்கையின்படி கிழக்கு மாகாணம் முதலிடத்தில் தெரிவாகி இருக்கின்றது.

இரண்டாவது இடத்தில் ஊவா மாகாணம், மூன்றாம் இடத்தில் வடக்கு மாகாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணம் இலங்கையின் ஒன்பதாவது இடத்தில், கடை நிலையில் இருந்து வந்தமை தெரிந்ததே.

இந்த நிலையில் இம்முறை ஒன்பதாம் இடத்தில் இருந்து அசுரவேகத்தில் முதலாவது இடத்திற்கு முன்னேறி இருப்பது கண்டு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றார்கள்.

கடந்த கபொத உயர்தர பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் 17,025 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இதில் 11,237 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது 66% சதவீதம் ஆகும்.அதேவேளை மூன்று பாடங்களிலும் மூன்று “ஏ” சித்தி பெற்றவர்கள் 472 பேர். அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் 1521 பேர்.

அத்துடன், மத்திய மாகாணம் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

Related Articles

Latest Articles