கேகாலை நகரிலுள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த மாணவிமீது, அவரின் காதலன் எனக் கூறப்படும் இளைஞனால் ‘ஆசிட்’ (அமிலம்) வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட மோதலில் மூவரும் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
21 வயதுடைய மாணவி, 45 வயதுடைய அவரின் தந்தை மற்றும் காதலன் எனக் கூறப்படும் 21 வயது இளைஞனுமே இவ்வாறு காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேகாலை, உடுமாகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி தனது தந்தையுடன் கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்துக்கு ஆட்டோவில் வந்துகொண்டிருந்துள்ளார்.
அவர்களை வழிமறித்த காதலன் எனக் கூறப்படும் இளைஞன், மாணவிமீது ஆசிட் வீச முற்பட்டுள்ளார். இதன்போது மாணவியின் தந்தை ஆசீட் போத்தலை பறித்து இளைஞன்மீது வீச முற்பட்ட சமயத்தில் மாணவி, அவரது தந்தை மற்றும் இளைஞர் ஆகியார் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
