கலஹா பகுதியில் விபத்து: அறுவர் காயம்

கலஹா – தெல்தோட்டை பிரதான வீதியின் லிட்டில்வெளி பகுதியில் இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த ஆறு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

( க. யோகா)

Related Articles

Latest Articles