ஈரான்மீதான தாக்குதல் மிக மோசமாக இருக்கும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிக மோசமாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க போா்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நோக்கிப் பயணித்து வருகிறது.

இதனிடையே, டொனால்ட் டிரம்ப் தமது ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் மேற்படி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பெரும் கடற்படை ஈரானை நோக்கிச் செல்வதாகவும், விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஆபிரகாம் லிங்கன்’ இந்தப் படையை வழிநடத்தி விரைவாகப் பயணிப்பதாகவும், வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டதைவிட பெரும் படையாக இப்படை அமைந்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘வெனிசுவேலாவைப் போலவே ஈரானும் விரைவில் உடன்படிக்கைக்கு வரும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அணு ஆயுதங்கள் இல்லை என்ற ஒப்பந்தத்தை நிறைவேற்ற அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வருவார்கள். அதுவே அனைத்து தரப்புக்கும் நன்மை பயக்கக்கூடியது.

கடந்த காலத்தில், அமெரிக்க அறிவுறுத்தலை ஈரான் ஏற்காததால் ‘ஆபரேசன் மிட்நைட் ஹேமர்’ எனும் ஈரானுக்கு பேரழிவை ஏற்படுத்திய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த தாக்குதல் மிக மிக மோசமாக அமையும். அவ்வாறு ஒரு தாக்குதல் நடத்த அனுமதிக்காமல் நீங்கள் நடந்துகொள்ளுங்கள்’ எனும் பொருள்பட டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Related Articles

Latest Articles