பண்டாரவளை பிராந்திய விசேட சுற்றிவளைப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொஸ்லந்தை, அலுத்வெல பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது, சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா பயிர்ச்செய்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, சுமார் 5 அடி உயரம் வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளுடன் கூடிய 3 ஏக்கர் நிலப்பரப்பு முற்றுகையிடப்பட்டதுடன், இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பயிர்ச்செய்கையின் மொத்தப் பெறுமதி சுமார் 5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரைப் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுரேஷ் ராஜரத்தினம்
