‘Airtel 4G Freedom Packs’ ஏன் நாட்டிலுள்ள முற்கொடுப்பனவு சந்தையை சீர்குலைக்கும்

ஒரு பாவனையாளர் தங்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநருடன் ஒரு முற்கொடுப்பனவு திட்டத்தை தேர்வு செய்வதற்குப் பின்னால் உள்ள புரிந்துணர்வு சிறந்த மதிப்புக்குரியதாகும், அத்துடன் அவர்கள் டேட்டா ஒதுக்கீடு மற்றும் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்.

ஆனால் தொழில்துறையில் முற்கொடுப்பனவு சேவை சலுகைகளில் மிகவும் கட்டுப்பாடுகள் உள்ளபோதிலும் பாவனையாளர்கள் உண்மையில் எவ்வளவு சுதந்திரம் அடைகிறார்கள்?

சராசரியாக, இலங்கையில் முற்கொடுப்பனவு பாவனையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 15 ரீலோட் அட்டைகளை தங்கள் டேட்டா மற்றும் தொலைபேசி அழைப்பு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய கொள்வனவு செய்கிறார்கள்.

இந்த ரீலோட்கள் பல டேட்டா தொகுப்புகள் மற்றும் Top-upகளைக் கொண்டுள்ளன, அவை டேட்டாக்களுக்காக ஒரு தனி பெக்கேஜை உள்ளடக்கும் வாய்ப்பு அதிகம்.

மேலும் பகல் நேரம் மற்றும் இரவு நேரம், சமூக ஊடகங்கள், காணொளி கலந்துரையாடல் பயன்பாடுகள் (Video conferencing) மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கு (Streaming apps) கூட இவை பிரிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, முற்கொடுப்பனவு என்ற கருத்தானது பெரும்பாலான பாவனையாளர்களை ஒரு வரையறைக்குள் உட்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாதமும், இலங்கையின் முற்கொடுப்பனவு பாவனையாளர்கள் 90 மில்லியனுக்கும் அதிகமான ரீலோட் அட்டைகளை வாங்குகின்றனர், இது ஒவ்வொரு நாளும் 3 மில்லியனுக்கும் அதிகமான ரீலோட்கள் ஆகும், அதன்படி மலிவு விலையென்ற விடயத்தை அடிப்படையாகக் கொள்கையில் ‘Freedom’ என்ற யோசனை நடைமுறைக்கு அப்பால் சென்று வார்த்தைகளில் மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட விடயமாகும்.

இருப்பினும், இந்த சிக்கலான நிலையை ஆராய்ந்த இந்தியாவின் பாரதீய எயார்டெல்லின் இணை நிறுவனமான எயார்டெல் லங்கா நிறுவனம், சர்வதேச முற்கொடுப்பனவு என்ற கருத்திற்கு அமைய ‘Airtel 4G Freedom Packs’ஐ அறிமுகப்படுத்தியது, வாடிக்கையாளர்களுக்கு ஒரேயொரு ரீலோட் பேக்கேஜ் மூலம் ஒரு மாத மதிப்புள்ள டேட்டா, அழைப்பு மற்றும் SMS ஆகியவற்றை வழங்குகிறது. இதனால் அதிகமான டேட்டா பெக்கேஜ்களை வாங்க வேண்டிய அவசியமில்லை.

நான்கு Freedom Packsகளின் விலைகள் முறையே 999 ரூபா, 599 ரூபா, 399 ரூபா மற்றும் 199 ரூபா, 2GB/day (60GB), 1GB/day (30GB), 1GB/day மற்றும் எயார்டெல் வலையமைப்புக்களுக்கு 1000 SMS வசதிகளும் வழங்கப்படும்.

தினசரி ஒதுக்கீட்டின் மூலம் இந்த Anytime Data 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பெக்கேஜ்கள் எல்லையற்ற எயார்டெல் அழைப்புகள், எயார்டெல் வலையமைப்புகளுக்கான 1000 SMS-கள், மற்றும் 50 உள்நாட்டு SMS-கள் ஆகியவற்றை அவற்றின் செல்லுபடியாகும் காலத்திலும் வழங்குகிறது. ஏனைய வலையமைப்பு அழைப்புகளுக்கு அவர்கள் முறையே 300 நிமிடங்கள், 300 நிமிடங்கள், 200 நிமிடங்கள் மற்றும் 100 நிமிடங்கள் வழங்குகிறார்கள்.

ஆனால் ஏனைய சேவை வழங்குநர்கள் வழங்குவதை விட இந்த Packs எவ்வாறு சலுகைகளை வழங்குகின்றன?

நாட்டின் ஏனைய மூன்று முக்கிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், 999 ரூபாவிற்கு ஒட்டுமொத்தமாக 15GB டேட்டா (Anytime) முதல் 24GB வரை (பகல் நேரம்/இரவு நேரம்) வழங்குகின்றனர்.

கணிசமாக குறைந்த டேட்டா ஒதுக்கீட்டைத் தவிர, இந்த Packsகள் எதுவும் அழைப்பு அல்லது SMS போனஸை வழங்காது.

வாடிக்கையாளர்களுக்கு ஏனைய சேவை வழங்குநர்களிடமிருந்து சுமார் 599 ரூபாவிற்கு, 10 GB (Anytime) மற்றும் 17GB (பகல்நேர/இரவு நேரம்) டேட்டாவை பெற்றுக் கொள்ளமுடியும். 399 ரூபாவிற்கு இதேபோல் 5.5GB (Anytime) முதல் 7.6GB வரை (பகல் நேரம்/இரவு நேரம்), அழைப்பு அல்லது SMS சேவைகள் இல்லாமல் வழங்குகிறது.

டேட்டா, அழைப்பு மற்றும் SMS ஆகியவற்றில் மிகச் சிறந்த சலுகை, அதே போல் டேட்டாவை எதற்கும் பயன்படுத்துவதற்கான தேர்வு ஆகியவை தற்போது வாடிக்கையாளர்களுக்கு Airtel 4G Freedom Packs மூலம் வழங்கப்பட்டாலும், ஏனைய சேவை வழங்குநர்கள் இது போன்ற எந்தவொரு Packageகளையும் அறிமுகம் செய்யும் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

இறுதியாக பாவனையாளர்களுக்கு மலிவு மற்றும் மீளமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு திறன்களை வழங்குவதற்கான இந்த புதிய வழி சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளூர் முற்கொடுப்பனவு சுற்றுச்சூழல் அமைப்பில் முன்னுதாரணத்தை மாற்றும், மேலும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் தனித்துவமான பெக்கேஜ்களை பாவனையாளர் மீது அதிகபட்ச கவனம் செலுத்தி அறிமுகப்படுத்த ஒரு போட்டி சூழ்நிலையை உருவாக்கும்.

Related Articles

Latest Articles