ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கத் துணைத் ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களின்படி, இந்த மோதலுக்கு ஒரு தீர்வு காணும் பொறுப்பு வேன்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரான் நேர்மையான முறையில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் அமெரிக்கா ஒத்துழைக்கும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டு ராணுவத் தலையீடுகளில் ஈடுபாடற்ற வேன்ஸ், இந்தப் பயணத்தின் மூலம் ஒரு நேர்மறையான முடிவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.










