“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தெளிவான வழியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. சிறப்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த கால ஆட்சியாளர்கள் இந்நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றனர். எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையின்கீழ் நாடு மீண்டெழுந்துவருகின்றது.”
இவ்வாறு பிரபல தொழில் அதிபரும், இலங்கை தொழிற்கட்சியின் தலைவரும், முன்னாள் தூதுவருமான ஏ.எஸ்.பி. லியனகே தெரிவித்தார்.










