“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் கட்சியின் அனுமதியை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராதநாதன் பெறவில்லை.” – என்று அவரது கட்சியின் செயலாளரான சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராதநாதனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மஹிந்த ராஜபக்ச தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. வெளியிட்ட கருத்து தொடர்பிலும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.
இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் வருமாறு ,
