ஹட்டன், கண்டி, பதுளை உள்ளிட்ட நகரங்களை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு!

இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள மனங்கவர் நகரங்களை மாதிரி நகரங்களாக அவற்றின் மரபுரிமை மற்றும் தனித்துவ அடையாளங்களை மேலோங்கச் செய்யும் வகையில் மறுசீரமைப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

குறித்த நகரங்களை நாமமிடுவதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தப்படுத்துவதற்கும் 2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 1,300 மில்லியன் ரூபாய்கள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அநுராதபுரம், கதிர்காமம், கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகரங்களில் தனித்துவ அடையாளம் மற்றும் விசேட இயல்புக்கூறுகளை மேலோங்கச் செய்யும் வகையில் நகர நாமமிடல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தகுதிவாய்ந்த மதியுரை சேவைகள் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள கற்கைக்கமைய, குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்காக 2026 ஆண்டில் 325 மில்லியன் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நகர அபிவிருத்தித் துறையில் முறையான, முன்னுரிமைப்படுத்தப்பட்ட மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையொன்றை மேம்படுத்தும் நோக்கில், நகரங்கள் 10 அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், மாத்தளை, ஹட்டன், மட்டக்களப்பு, சிலாபம், தம்புத்தேகம, வவுனியா, எஹலியகொட, பதுளை மற்றும் மாத்தறை போன்ற நகரங்களில் அடையாளங் காணப்பட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள 217 கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நகர நாமமிடல் கருத்திட்டத்திற்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எஞ்சுகின்ற 975 மில்லியன் நிதி மற்றும் ஹட்டன் மற்றும் மாத்தளை போன்ற நகரங்களின் அபிவிருத்திப் பணிகளும் இவ்வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவதால் குறித்த நகர அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபாய்கள் உள்ளடக்கப்பட்டு 1,475 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்கான 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை துரிதமாக அமுல்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles