இலங்கைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ‘டித்வா’ அனர்த்த நிலைக்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பேரிடருக்குப் பிந்தைய நிலைமை மற்றும் தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும், ‘டித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘டித்வா’ சூறாவளி அனர்த்த நிலைமையின் போது ஆசிய அபிவிருத்தி வங்கி இதுவரை வழங்கிய உதவிகளையும், இலங்கையுடன் பேணிவரும் விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்பையும் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமாகப் பேணி பொருளாதார அபிவிருத்தியை எட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.

‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் கண்டு கொள்ள தமக்கு வாய்ப்புக் கிடைத்ததாக இதன்போது குறிப்பிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்,
மத்திய மலைநாட்டின் நீர் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, மீண்டும் இத்தகையதொரு நிலைமை ஏற்படாதிருக்கத் தேவையான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் அதன் தெற்காசிய பிராந்திய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனா சிரேஸ்தா (Sona Shrestha), தலைவர் அலுவலகத்தின் பிரதம ஆலோசகர் கெயிச்சிரோ இனுய் (Keiichiro Inui), தலைவர் அலுவலகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மனிஷா பிரதானாங்கா (Manisha Pradhananga) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles