மூன்று நாள் பயணமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா இன்று (23) இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை கைத்தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ வரவேற்றார்.
இன்று கொழும்பு துறைமுகத்திற்கு சென்று கட்டுப்பாட்டுக் கோபுரத்தை ஆய்வு செய்ய உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பின்னர், தனியார் துறை பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு மதிய விருந்தில் கலந்துகொள்வார்.
பிற்பகலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடத் தூதரகத்தில் நடைபெறும் வரவேற்பு மற்றும் பணியாளர் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
நாளை, கன்டாவும் அவரது குழுவினரும், டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக கேகாலை மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
