பதுளை – நானுஓயா இடையிலான பயணிகள் புகையிரத சேவையை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிக்கின்றது.
தித்வா சூறாவளியால் சேதமடைந்த மலையகப் புகையிரத பாதையில் நானுஓயாவிலிருந்து அம்பேவெல வரை சேதமடைந்திருந்த பாதையைப் பழுதுபார்க்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் கடின உழைப்பினால் இப்பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, மலையகப் பாதையின் நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான பகுதியில் புகையிரத சேவைகள் இம்மாதம் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்காக விசேட கால அட்டவணை ஒன்றின் கீழ் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரம்புக்கனை முதல் நானுஓயா வரையிலான பாதையின் சில பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நானுஓயாவிலிருந்து
பொடி மேனிக்கே – காலை 9.00 மணி
உடரட்ட மேனிக்கே – பிற்பகல் 2.30 மணி (புதன்கிழமை தவிர்த்து)
எல்ல ஒடிஸ்சி – பிற்பகல் 1.00 மணி
(புதன்கிழமைகளில் மட்டும்)
பதுளையிலிருந்து
உடரட்ட மெனிக்கே – காலை 9.00 மணி (புதன்கிழமை தவிர்த்து)
பொடி மெனிக்கே – பிற்பகல் 3.00 மணி
எல்ல ஒடிஸ்சி – காலை 7.45 மணி (புதன்கிழமைகளில் மட்டும்) என்ற வகையில் புகையிரத சேவைகள் இடம்பெறும் வகையில் நேர அட்டவணையையும் புகையிரத திணைக்களம் நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் மூலம் சுற்றூலாத் துறையும் மீண்டும் அபிவிருத்தி அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பசறை நிருபர்










