போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்தமை தொடர்பில், பண்டாரவளை நகரிலுள்ள உணவு விற்பனை நிலையம் ஒன்றுக்கு ரூ.1,000,000 (ரூ.1 மில்லியன்) அபராதம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
Millers Limited, Bandarawela Hotel, Cargills Building, முதலாம் மாடி (Food Court), வெலிமடை வீதி, பண்டாரவளை என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, அக்காலத்தில் நடைமுறையிலிருந்த 2430/15 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கம் 93 இன் கீழ் 500ml குடிநீர் போத்தலுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.70 அதிகபட்ச சில்லறை விலையை மீறி, 500ml குடிநீர் போத்தல் ஒன்றை ரூ.100க்கு விற்பனை செய்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு 2026.09.23 அன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி நிறுவனத்திற்கு ரூ.1,000,000 அபராதம் விதிக்கப்பட்டது.
⚠️ இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ரூ.70 என்பது சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட காலத்தில் நடைமுறையிலிருந்த அதிகபட்ச சில்லறை விலையாகும். இது தற்போதைய விலை அல்ல.
💧 தற்போது நடைமுறையிலுள்ள 2026.06.10 ஆம் திகதி 2492/29 இலக்க அதிவிசேட வர்த்தமானியின் கீழ், 500ml போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலை ரூ.80 ஆகும்.
🧾 Food Court, ஹோட்டல், உணவகம் அல்லது வேறு எந்த வர்த்தக நிலையத்தில் வாங்கினாலும், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி கட்டணம் அறவிட முடியாது. விலையைச் சரிபார்த்து பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
📞 அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட சந்தை முறைகேடுகளை அலுவலக நேரங்களில் 1977 ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்கவும்.
