போர்க்களமான இறுதிப் போட்டி: அர்ஜென்டீனா வீரர்கள் மூவருக்கு தடை

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிரணி வீரர்களைத் தாக்கிய அர்ஜென்டீனாவின் முன்னணி வீரர்கள் மூவருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தடை விதித்துள்ளது.

அத்துடன், மத்திய கள வீரர் லியான்ட்ரோ பரீடஸுக்கு (Leandro Paredes) 10 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் (Eric Garcia) கழுத்தைப் பிடித்துத் தள்ளியதுடன், காவியையும் (Gavi) தரைமட்டமாக்கிய பரீடஸுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையானது, 2014 ஆம் ஆண்டு உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸுக்குப் பிறகு உலகக் கோப்பை வரலாற்றில் விதிக்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும், அர்ஜென்டீனாவின் தற்காப்பு ஆட்டக்காரர் நஹுயல் மொலினாவுக்கு (Nahuel Molina) 7 போட்டிகளிலும், தியாகோ அல்மாடாவுக்கு (Thiago Almada) ஒரு போட்டியிலும் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அபராதமாக பரீடஸ் மற்றும் மொலினாவுக்கு தலா 90,000 டாலர்களும், அல்மாடாவுக்கு 30,000 டாலர்களும் FIFA வினால் விதிக்கப்பட்டுள்ளன.

தேசிய அணிகளுக்கான சர்வதேச FIFA காலண்டர் அட்டவணையின்படி ஜூன் 2027 வரை 10 போட்டிகளே திட்டமிடப்பட்டுள்ளதால், பரீடஸிற்கு விதிக்கப்பட்ட இத்தடையானது உண்மையில் அவர் அர்ஜென்டீனா அணியில் இருந்து ஓராண்டு காலம் நீக்கப்பட்டதற்குச் சமமானதாகும்.

இதேவேளை, மோதலில் ஈடுபட்ட ஸ்பெயின் வீரர் காவிக்கும் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 26 அன்று வெம்ப்லி (Wembley) மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள நேஷன்ஸ் லீக் போட்டியில் அவர் விளையாட முடியாது.

அர்ஜென்டீனா அணியின் பயிற்றுவிப்பாளர் ரொபர்டோ ஆயாலாவுக்கும் (Roberto Ayala) 3 போட்டிகள் தடையும், 30,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரையிறுதி வெற்றிக்குப் பிறகு போக்லாந்து தீவுகள் (Falkland Islands) தொடர்பான அரசியல் பதாகையை ஏந்திச் சென்றமை மற்றும் ரசிகர்கள் பாடிய இனவெறிச் பாடல்கள் உட்பட உலகக் கோப்பையின் போது நடந்த பல்வேறு சம்பவங்களுக்காக அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்திற்கு 1,10,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இனவெறி எதிர்ப்புத் திட்டங்களுக்காக 100,000 டாலர்களைச் செலவிடுமாறும் FIFA உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தடைகள் மற்றும் அபராதங்களுக்கு எதிராக அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனம் FIFA விடமும், அதனைத் தொடர்ந்து விளையாட்டுக்கான சர்வதேச மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் (CAS) மேல்முறையீடு செய்ய முடியும்.

முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியில் ஸ்பெயின் வீரர் Ferran Torres அடித்த ஒரேயொரு கோலின் மூலம் அர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles