” நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா ?தமிழர்களுக்கான தீர்வு திட்டம் என்னவென்பதை சிங்கள தலைவர்கள் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.” –
என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வலியுறுத்தினார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” அன்று முதல் இன்றுவரை தேர்தல் காலங்களில் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி கதைக்கப்படுவது வழமையாகிவிட்டது.
இந்தநாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும் என்ற யோசனையை நாம் முன்மொழிகின்றோம்.
இந்த நாட்டை இதுவரையில் சிங்கள தலைவர்களே நிர்வகித்துள்ளனர். ஆனாலும், அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டுவந்தனர். எனவே, இந்நிலைமைக்கு சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூறவேண்டும்.
அதேவேளை, 13, 13 பிளஸ் என்பதெல்லாம் முக்கியம் அல்ல. தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான பேச்சுகளை ஆரம்பித்து, இதோ, இந்த தீர்வைதான் தம்மால் வழங்கமுடியும் என்பதை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். நிர்வாகத்தை வழங்கவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்தவேண்டும்
எத்தனை வருடங்கள் இதற்கான பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன? இதனால் சாதாரண தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர். அதிகாரத்தைகோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்