பதுளை, தியத்தலாவை பகுதியில் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இபோச பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் எவரது நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பிலிருந்து , பதுளை நோக்கிப் பயணித்த இபோச பஸ்ஸொன்று, இன்று (27) அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
