ராவண எல்ல பகுதியில் கார் விபத்து – இருவர் காயம்

எல்ல, வெல்லவாய பிரதான வீதியில் ராவண எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் காரொன்று, வீதியை விட்டு விலகி சுமார் 350 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (03) மாலைவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

திஸ்ஸமஹாராம பகுதியில் இருந்து எல்ல பகுதிக்கு வந்து கொண்டிருந்த வெகனார் ரக கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த காரில் கணவனும் மனைவியும் பயணித்துள்ளதாகவும் காரை மனைவியே செலுத்தி வந்து உள்ளதாகவும் மனைவிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறு காயங்களுக்கு உள்ளான இருவரும் தெமோதரை வைத்தியசாலைக்கு அவ்விடத்தில் இருந்தவர்களின் உதவியுடன் 1990 உயிர் காவு வண்டியில் தெமோதரை வைத்தியசாலைக்கு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனராஜா டிமேஷன்

Related Articles

Latest Articles