பிரதமர் மகிந்த ராஜபக்ச, நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபுவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரிய நிலையில், பிரபுவின் வெற்றி உறுதியாகியுள்ளதாக அந்தக் கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முகமாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.அந்த வகையில் நேற்று நுவரெலியாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச அந்தக் கட்சியின் வேட்பாளர்களின் கூட்டங்களிலும் பங்கெடுத்தார்.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் வேட்பாளர்களான சீ.பீ. ரத்நாயக்க, எஸ்.பீ. திசாநாயக்க ஆகியோரின் கூட்டங்களிலும் பங்கெடுத்தார. இதன்போது முத்தையா பிரபுவின் 10ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், பிரதமரின் இந்த கோரிக்கை முத்தையா பிரபுவின் வெற்றியை நுவரெலியா மாவட்டத்தில் உறுதிசெய்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.