தளபதி விஜய்க்கு நாடாளுமன்றில் சாணக்கியன் வாழ்த்து!

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ் நாட்டு அரசுடன் கலந்துரையாடுவதற்கு காத்திருக்கின்றோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ்நாடு அரசோடும், தமிழக மக்களோடும் ஈழத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக வேலை செய்வதற்கு நாம் காத்திருக்கின்றோம்.’ எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles